இன்றைய நாளை (அக்டோபர் 22) காஷ்மீருக்குள் இந்தியப் பாதுகாப்புப் படை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி 72ஆம் ஆண்டு கறுப்பு தினம் என பாகிஸ்தானில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் மக்கள் அமைதிப் பேரணி நடத்தி அனுசரித்துவருகிறார்கள்.
இந்த ஆண்டு கறுப்பு தின அமைதிப் பேரணிக்காக பல்வேறு கட்சிகள் அழைப்புவிடுத்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த அமைதிப் பேரணி ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டமாக மாற, காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் அமைதிப் பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அமைதிப் பேரணியை கலைக்க காவல் துறை சார்பாக கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தடியடியில் இருவர் உயிரிழந்ததோடு 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: ஜனநாயக கடமையாற்றிய 102 வயது முதியவர்