இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஷகெக் சுராஷ் கூறும்போது, ’தகாப் மாவட்டத்தில் ஷாபிகாலி, நாவா பகுதிகளில் துணை பாதுகாப்புப் படையினர் தலிபான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் 12 தலிபான் பயங்கரவாதிகள், இரண்டு துணை பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர். மேலும், ஐந்து பயங்கரவாதிகளும், ஐந்து துணை பாதுகாப்புப் படை வீரர்களும் படுகாயமடைந்தனர்.
வியாழக்கிழமை இரவு ஆரம்பித்த இந்த துப்பாக்கிச் சண்டை வெள்ளிக்கிழமை மதியம் முடிவடைந்தது. தலிபான் பயங்கரவாதிகள் முகாமை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியில் துணை பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.