பெய்ஜிங் : மத்திய சீனாவின் ஹெனன் மாகாணத்தில் அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் மாகாணத்திலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 201.9 மில்லி மீட்டர் மழை செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) பதிவாகி இருந்தது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஜெங்ஜோவின் நகரப் பகுதிகளில் சராசரியாக 457.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெனன் மாகாணத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்துவருகிறது. ஆகையால், தொடர் மழை காரணமாக விவசாயப் பொருள்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழைநீர், ஆற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. 16க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமையும் (ஜூலை 21) அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
இதையும் படிங்க : மழை நீர் தேக்கம்: நீச்சலடித்து கம்யூனிஸ்ட் போராட்டம்