ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் சிலர் தொழுகைக்காக லாரியில் சென்றுள்ளனர். அப்போது அந்த லாரி சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த கன்னிவெடியின் மேல் சென்றதால், லாரி வெடித்துச் சிதறியது.
இந்த குண்டு வெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்து மோசமான நிலையில் உள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களாகும்.
இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதை தலிபான் பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.