அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பரப்புரை நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஜோ பிடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில், ''இந்த ஆண்டின் எழுச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் இளம் தலைமுறையினர் மாற்றத்திற்கான ஒருங்கிணைப்பு, பேரணி, போராட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது தான். இளம் தலைமுறையினர் தான் அமெரிக்காவில் ஒரு புதிய இயல்பை உருவாக்க முடியும். இந்த அமைப்பு நம் அனைவரையும் சமமாக நடத்துவதுடன், சமமான வாய்ப்பையும் வழங்குகிறது. அதனால் இம்முறை முன்பு இருந்ததைவிடவும் இன்னும் பலமாக நாம் வெளிவர வேண்டும்.
அதற்கு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதிபர் பதவிக்கு அனைவரை விடவும் அவர் சிறந்தவர். மிகச்சிறந்த அதிபராக வருவார் என்று எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அனைத்து பிரச்னைகளையும் வித்தியாசமாகவும், சரியாகவும் பார்க்கக்கூடியவர். நிச்சயம் அனைத்து பிரச்னைகளயும் சரிசெய்வார். நவம்பர் 3ஆம் தேதி நடக்கும் தேர்தலில் அனைத்து இளைஞர்களும் வாக்களிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
-
One of the most inspiring things about this year has been seeing so many young people organizing, marching, and fighting for change. And to change the game on any of the issues we care about, we've got to vote for @JoeBiden and @KamalaHarris. pic.twitter.com/vfHnP4XPxK
— Barack Obama (@BarackObama) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One of the most inspiring things about this year has been seeing so many young people organizing, marching, and fighting for change. And to change the game on any of the issues we care about, we've got to vote for @JoeBiden and @KamalaHarris. pic.twitter.com/vfHnP4XPxK
— Barack Obama (@BarackObama) October 21, 2020One of the most inspiring things about this year has been seeing so many young people organizing, marching, and fighting for change. And to change the game on any of the issues we care about, we've got to vote for @JoeBiden and @KamalaHarris. pic.twitter.com/vfHnP4XPxK
— Barack Obama (@BarackObama) October 21, 2020
ஜனநாயகக் கட்சி வட்டார தகவலின்படி, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தேர்தலுக்கு முன்னதாக மற்ற முக்கிய மாநிலங்களுக்கு பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின்போது, ஒபாமா தனது முன்னாள் துணை அதிபருக்கு ஆதரவாக பிலடெல்பியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பேசினார்.
இதற்கிடையில், ஒரு முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பிடன் முன்னிலை வகித்ததாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு மோன்மவுத் பல்கலைக்கழகக் கருத்துக்கணிப்பில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 54 சதவீதம் பேர் பிடெனுக்கு, 42 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ட்ரம்ப்பிற்கும் ஆதரவளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிடன் ஒரு கிரிமினல், நீங்களும் கிரிமினல்" - செய்தியாளர்களை வறுத்தெடுத்த ட்ரம்ப்