ETV Bharat / international

'நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம்; ஆனால்...' - கமலா ஹாரிஸ் - ஜோ பைடன்

வாஷிங்டன்: நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம், ஆனால் நிச்சயம் கடைசிப் பெண் அதிபராக இருக்க மாட்டேன் என்று துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Kamala Harris
Kamala Harris
author img

By

Published : Nov 8, 2020, 3:43 PM IST

Updated : Nov 8, 2020, 5:52 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், ஜோ பைடன் நேற்று(நவ.07) அதிபர் தேர்தலில் வெற்றிபெறத் தேவையான 270 இடங்களையும்விட கூடுதலான இடங்களைப் பெற்று, வெற்றி பெற்றார்.

மேலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 239 ஆண்டுகள் பழைமயான ஜனநாயக நாட்டில் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் கமலா ஹாரிஸ் பெற்றார்.

இந்நிலையில் வெற்றி பெற்றவுடன் மக்களிடம் பேசிய அவர், "இந்த வெள்ளை மாளிகையில் பொறுப்பு ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம், ஆனால் நிச்சயம் கடைசிப் பெண்ணாக இருக்க மாட்டேன்.

இன்றிரவு தொலைக்காட்சியைப் பார்க்கும் ஒவ்வொரு சிறுமிகளுக்கும் ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். இந்த நாட்டில் அனைத்தும் சாத்தியம். நீங்கள் எந்த பாலினமாக இருந்தாலும் சரி, எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, உறுதியாக இருந்து, லட்சியத்தை நோக்கிச் செல்லுங்கள். இதற்கு முன் ஒன்று நடந்ததில்லை என்பதாலேயே அது எப்போதும் நடக்காது என்றில்லை. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நாங்கள் உங்களைப் பாராட்டுவோம்.

கவனிக்கப்படாத ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களே அனைவருக்குமான சமத்துவம் மற்றும் நீதிக்காக போராடி தியாகம் செய்துள்ளனர். அவர்கள்தான், நம் நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பாக உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: அரசியல்வாதி அதிபரான கதை!

Last Updated : Nov 8, 2020, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.