ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தும்: உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

ஜெனீவா: கரோனா தடுப்பு மருந்து சோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, தடுப்பு மருந்து சோதனையில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO: vaccine trial delay a 'wake-up call'

author img

By

Published : Sep 11, 2020, 12:08 PM IST

உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பு மருத்தின் மீது, உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தத் தடுப்பு மருந்து முதல் இரண்டு கட்டங்களில் சிறப்பான முடிவுகளை அளித்துள்ளதால் விரைவில் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அரிதான நரம்பியல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பிரிட்டன் உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்தத் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன், "இது நல்லது என்றே நான் நினைக்கிறேன். மருத்துவ ஆராய்ச்சியில் எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் எடுத்துரைக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது.

இதற்காக நாம் சோர்வடையத் தேவையில்லை. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்தான், தற்போது நிறுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை நல்ல முறையில் முன்னோக்கி நகரும் என்று நம்புகிறோம். ஆனால் மீண்டும் சொல்கிறேன், நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இது (கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது) இந்த வைரசிலிருந்து மக்களைக் காப்பாற்ற நடைபெறும் பந்தயமே தவிர, யார் முதலில் மருந்து கண்டுபிடிக்கிறார்கள் என்று மருத்துவ நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் இடையே நடைபெறும் பந்தயம் அல்ல" என்றார்.

உலகெங்குமிருந்து இதுவரை கரோனா தொற்று காரணமாக இரண்டு கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இரட்டை கோபுர தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புப் படையின் தோல்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.