ETV Bharat / international

கொரோனா வைரஸ்: 250 கோடி டாலர் நிதி ஒதுக்க அமெரிக்கா திட்டம் - coronavirus outbreak latest

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சுமார் 250 கோடி டாலர் நிதி ஒதுக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.

WH
WH
author img

By

Published : Feb 25, 2020, 2:44 PM IST

சீனா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை இரண்டாயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 கோடி டாலர் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்குமாறு அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெள்ளை மாளிகை கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 கோடி டாலர் நிதி ஒதுக்க திட்டமட்டுள்ளோம் என்றும், தடுப்பூசி, சிகிச்சை, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய இந்த நிதி பயன்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • The Coronavirus is very much under control in the USA. We are in contact with everyone and all relevant countries. CDC & World Health have been working hard and very smart. Stock Market starting to look very good to me!

    — Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதே சமயம், இந்த நிதி போதுமானதாக இருக்காது என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : குமரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் முதியவர் அனுமதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.