ETV Bharat / international

அதிபர் தேர்தலுக்கும் 270 நம்பருக்கும் உள்ள தொடர்பு என்ன? - அதிபர் தேர்தலுக்கும் 270 நம்பருக்கும் உள்ள தொடர்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் நம்பராக 270 திகழ்ந்து வருகிறது. அவற்றை அடையும் நபரால் தான் வெள்ளை மாளிகையில் ஆட்சி அமைத்திட முடியும்.

ே
ேே
author img

By

Published : Nov 3, 2020, 8:03 PM IST

உலக மக்கள் ஆவலோடு காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தேர்தலில் அமெரிக்க மக்கள் டிரம்புக்கோ, பிடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.

இதனை வாக்காளர்கள் குழு என்று அழைக்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது, தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டதுதான் "எலக்டோரல் காலேஜ்" எனப்படும் வாக்காளர் குழு அமைப்பு.

ஒவ்வொரு மாகாணத்திற்கும், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். இன்று அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும்.

பெரும்பாலான மாகாணங்களில் எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். அந்த வகையில் தான், 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு கிட்டத்தட்ட 2.9 மில்லியன் மக்கள் வாக்களித்தும் தோல்வியடைந்தார்.

270 நம்பர்

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி, கூடுதலாக இரண்டு செனட்டர்கள் வாக்குகள் சேர்க்கப்படும். கணக்கிட்டதில், கலிஃபோர்னியாவில் தான் அதிக வாக்குகளாக 55 உள்ளன. டெக்சாஸில் 38 வாக்குகளும், நியூயார்க் மற்றும் புளோரிடாவில் வெற்றிபெறும் வேட்பாளர் 29 வாக்குகளும் பெற முடியும்.

இல்லினாய் மற்றும் பென்சில்வேனியாவில் தலா 20 வாக்குகளும் பெற முடியும். அதிக வாக்குகளைப் உள்ள மாகாணங்களில் முதல் 10 பட்டியலில் ஒஹியோவில் 18 வாக்குகளும், ஜார்ஜியா மற்றும் மிச்சிகனில் 16 வாக்குகளும், வட கரோலினா 15வும் உள்ளன.

ட்ரம்ப் வெற்றிப்பெறும் வழி!

ட்ரம்பிற்கு 270 வாக்குகள் பெற பல வழிகள் உள்ளன. ஆனால், அவற்றில் சிறந்த பாதையானது புளோரிடா மற்றும் பென்சில்வேனியாவை வெல்வது தான். அதே போல், 2016இல் குறுகியதாக எடுத்துச் சென்ற வட கரோலினா மற்றும் அரிசோனா மாகாணத்தையும் வெல்ல வேண்டும்.

முன்பு 2016 இல் ஜார்ஜியா மற்றும் ஒஹியோவையும் எளிதாக ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், இம்முறை அங்கு போட்டி கடுமையாக இருக்கக்கூடும். 29 வாக்குகளுடன், புளோரிடா டிரம்பிற்கு மிக முக்கியமான மாகாணமாக திகழக்கூடும். இவற்றை ட்ரம்ப தவறவிட்டால், வெள்ளை மாளிகையை அடைவது சிரமமாகி விடும்.

பிடனுக்கு என்ன தேவை

கடந்த 2016இல் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வி கண்ட மாகாணங்களான மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவை ஜோ பிடன் குறிவைத்துள்ளார். அதே போல், அரிசோனா மற்றும் புளோரிடா மாகாணங்களிலும் பிடன் தனது கவனத்தை இரட்டிப்பாக்குகிறார். ட்ரம்பின் வெற்றியை தடுக்கும் சக்தி கொண்ட மாகாணங்களை குறிவைத்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.