அமெரிக்கா நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஜுவான் ஹில்ஸ் உயர்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு படிக்கும் பேய்ட்டன் லண்டாஸ் (Payton Landaas) என்ற மாணவன், புதிதாகத் தொடங்கிய ட்ரோன் நிறுவனம் மூலம் பல அரிய காட்சிகளைப் படம் பிடித்துள்ளார்.
அப்போது, டோஹேனி கடற்கரையில் அலைகளின் வரிசையைப் படம் பிடிக்க முயன்றபோது, சாம்பல் திமிங்கலம் சர்பிங் விளையாட்டில் ஈடுபட்ட மக்கள் அருகில் செல்வதைப் பார்த்து படம் பிடிக்கத் தொடங்கினர். தங்களை நோக்கி திமிங்கலம் நேராக வருவதை அறியாத மக்கள், ஜாலியாக சர்பிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது, திமிங்கிலம் மெதுவாக மக்கள் அருகில் சென்றதும் திடீரென்று அசால்ட்டாக ஆழமாகச் சென்று மறைந்துவிடுகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இது குறித்து மாணவன் கூறுகையில், "சாம்பல் நிற திமிங்கலங்கள் மிகவும் மென்மையானவை, அவற்றை நட்பு திமிங்கலம் என அழைப்பார்கள். இதனால், அவை செய்யும் அனைத்துமே குறும்புத்தனமாக இருக்கக்கூடும்" எனத் தெரிவித்தார். தற்போது, இந்தக் காணொலி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நாய்க்குட்டிக்கு யூனிகார்ன் போல் நெற்றியில் கூடுதல் வால் - தத்தெடுக்கக் குவியும் மக்கள்