அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் காவல் நிலையத்துக்கு ஸ்டார்லின் லோபஸ் (26) என்ற வாலிபர் ஒருவர் தீடீரென கத்தியுடன் நுழைந்தார். பின்னர், தனது இடது கையில் கத்தியுடன் தன்னை சுட்டுவீழ்த்துங்கள் என்று அங்கு இருந்த காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு லேசர் துப்பாக்கி உதவியுடன் அவரை மயக்கமடைய செய்தனர். பின்னர், விசாரித்ததில் ஸ்டார்லின் லோபஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.