ETV Bharat / international

குழந்தைகளுக்கான விழிப்புணர்வு இ-புத்தகத்தை உருவாக்கிய மருத்துவர்கள்! - குழந்தைகளுக்கான விழிப்புணர்வு

ஹைதராபாத்: எமோரி உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக கோவிட்-19 குறித்து சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இ-புத்தகப் போட்டியில் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்திய வெர்ஜினியா பல்கலைக் கழகத்தின் இரண்டு பெண் மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

UVA physicians  We're Going to Be O.K  COVID-19 children's book  வெர்ஜினியா பல்கலைக் கழக மருத்துவர்கள்  வீ ஆர் கோயிங்க் டூ ஓ.கே  குழந்தைகளுக்கான விழிப்புணர்வு  கோவிட்-19 குழந்தைகளுக்கான இ-புத்தகப் போட்டி
குழந்தைகளுக்கான விழிப்புணர்வு இ-புத்தகத்தை உருவாக்கிய மருத்துவர்கள்
author img

By

Published : May 25, 2020, 12:32 PM IST

மருத்துவர் எபோனி ஜேட் ஹில்டன், மருத்துவர் லே- ஆன் வெப் ஆகிய இருவரும் சிறுவர்களுக்காக உருவாக்கிய 'வீ ஆர் கோயிங்க் டு ஓ.கே.' என்ற இ-புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்கள் உருவாக்கியுள்ள புத்தகம், சிறுவர்களுக்கு கோவிட்- 19 குறித்த புரிதலைப் பெறுவதற்கு ஏற்ற வகையிலும், இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கோவிட்-19 பற்றிப் புரிதலை ஏற்படுத்துவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்புத்தகம், எமோரி உலக சுகாதார நிறுவனத்தின் கோவிட்-19 தொடர்பாக சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இ-புத்தகப் போட்டியில் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளது.

"பயத்தின் எதிரி சரியான தகவல் என்ற புரிதலால், சிறுவர்களுக்கு உரிய தகவலை கொண்டு சேர்த்து அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என இப்புத்தகத்தை வடிவமைத்துள்ளோம். 5 வயது முதல் 9 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்புத்தகத்தில், இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் பெறும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பிரத்யேகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், இந்தத் தொற்றால் சிறுவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களையோ அல்லது தங்களது சகோதர, சகோதிரிகளையோ இழந்திருக்கலாம். அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த அழுத்தத்திலிருந்து அவர்களால் விடுபடமுடியும்" என மருத்துவர் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

"இந்த புத்தகத்திற்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு மற்றும் கௌரவத்தின் பின்னணியை நான் என்னவாக புரிந்துகொள்கிறேன் என்றால், இது நிறப்பாகுபாடு அல்லாமல் அனைத்துவகை சமூகத்தையும் சென்றடைந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள எனக்கு இதன் முக்கியத்துவம் தெரியும்.

சிறுவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்தான் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறது என்பதை உணர்ந்து பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள்வார்கள்" என மருத்துவர் ஆன் வெப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவிட்-19 சவாலை எதிர்கொள்வது எப்படி? நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்ப் பிரத்யேகப் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.