இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - அமெரிக்கா - இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை
இந்திய மக்களுக்கும் சுகாதாரத் துறைக்கும் வலுசேரக்கும்விதமாக அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டுவருவதால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறிவருகிறது. இதையடுத்து பல்வேறு உலக நாடுகள் தங்கள் உதவிக்கரத்தை நீட்டிவருகின்றன.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் இந்தியாவுக்கு முழு உதவியை செய்ய தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், "கோவிட்-19 பரவல் காரணமாகத் தவித்துவரும் இந்திய அரசுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறது.
இந்திய மக்களுக்கும் சுகாதாரத் துறைக்கும் வலுசேரக்கும்விதமாக அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உதவி செய்ய வேண்டும் என அங்குள்ள இந்திய அமெரிக்கர்களால் தொடர் அழுத்தம் அந்நாட்டு அரசுக்கு அளிக்கப்பட்ட நிலையில் பிலிங்கன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுடன் துணை நிற்போம் - பாகிஸ்தான்