உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், உலகின் வல்லராசான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இந்நோயால் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
இதையடுத்து அமெரிக்காவின் ஹார்வர்டு, கொலம்பியா, பிரின்ஸ்டன், ஸ்டான்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த புதிய முடிவு எடுத்துள்ளன. மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வர வேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்மாத இறுதிவரை மாணவர்களுக்கு வகுப்பு ஆன்லைன் வழியிலேயே நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை உடனடியாக கட்டுக்கொள் கொண்டுவர, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவசர கால நிதியாக சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
இதையும் படிங்க: இங்கிலாந்தில் சுகாதாரத்துறை அமைச்சரையே விட்டுவைக்காத கொரோனா