கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பதவியேற்ற 100 நாள்களில் 100 மில்லியன் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோடை கால இறுதிக்குள் 300 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் தேசிய சுகாதார மையத்தில் வெளியே இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், "எதிர்பார்த்ததற்கு முன்பாகவே, ஜூலை மாத இறுதிக்குள் மாடர்னா மற்றும் ஃபைசர் நிறுவனத்திடமிருந்து 600 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு இருப்பு வைத்து கொள்ள திட்டமிட்டுவருகிறோம்" என்றார்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் கரோனா தடுப்பூசி விநியோகப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.