ETV Bharat / international

அமெரிக்கா-தலிபான்கள் ஒப்பந்தம், பாகிஸ்தானுக்கு சாதகமாகக்கூடாது - இந்திய தூதர்

தலிபான் பிரச்னை குறித்து மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா அமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதர் மீரா ஷங்கருடன் நடத்திய கலந்துரையாடல்

US-Taliban Deal
US-Taliban Deal
author img

By

Published : Mar 6, 2020, 8:36 AM IST

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்குமிடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது அதில் இந்தியாவும் கலந்துகொண்டது. இது போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வாய்ப்பை வழங்கும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறும்.

சனிக்கிழமையன்று தோஹாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது கத்தார் இந்திய தூதர் பி குமாரன் கலந்துகொண்டார். இதன் மூலம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ முன்னிலையில் அமெரிக்காவின் அமைதி தூதர் ஜல்மே கலீல்சாத் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்நிகழ்வில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி, உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கமிலோவ் உள்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தலிபான்கள் குறித்த ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வில் இந்தியா கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். தலிபான்கள் குறித்த விஷயங்களில் கடந்த காலங்களில் இந்தியா பெரிய அளவில் ஆர்வம் காட்டியது இல்லை. முன்னதாக, ஓய்வுபெற்ற இரண்டு தூதர்களை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இந்தியா மாஸ்கோவுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், அது ஒரு ‘அதிகாரப்பூர்வமற்ற’ பேச்சுவார்த்தையாகவே இருந்தது.

மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா, அமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதர் மீரா ஷங்கருடன் தலிபான்களின் பிரச்னை குறித்தும் இதனால் இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் கலந்துரையாடினார்.

படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெற்ற பின் நடைபெறும் நிகழ்வை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் மீரா ஷங்கர் நம்புகிறார். மேலும், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் துருப்புக்களை அனுப்பாது என்றாலும், அந்நாட்டு அரசுக்கு தேவையான உதவிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

முன்னதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் துணைத் தலைவருமான ஆண்ட்ரூ கிளிமோவை ஸ்மிதா ஷர்மா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ரஷ்யாவை உட்படுத்தாத எந்த சமாதான ஒப்பந்தமும் ஆப்கானிஸ்தானில் வெற்றியடையாது என்றார். தலிபான்கள் பிரச்னையில் ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேள்வி: தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது இந்தியா அங்கு இருந்தது. இந்த நேரத்தில் இந்தியாவின் மிகப் பெரிய சிக்கல்கள் என்று எதை கூறலாம்?

பதில்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை விரைவாக திரும்பப் பெறுவது என்பது அங்கு குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும். இதனை அங்குள்ள பயங்கவாதிகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதே இந்தியாவின் கவலை. இது அப்பகுதியில் நிலவிவரும் அமைதிக்கும் சர்வதேச பாதுகாப்பிற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே இந்தியாவின் கவலை. ஆப்கானிஸ்தானிலிருந்து படிப்படியாக அமெரிக்க படைகள் திரும்பப்பெற வேண்டும் என்றார்.

இத்தனை காலமாக ஆப்கன் படைகளுக்கும் காவல் துறையினருக்கும் தேவையான பொருளாதார உதவிகளை தந்தது சர்வதேச நாடுகள் தானே தவிர அந்நாட்டு அரசு அல்ல. எனவே, திடீரென்று அவர்களுக்கு அளிக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டால், ஆப்கான் அரசு கவிழலாம்.

இரண்டாவதாக, தலிபான்கள் பிரச்னையை பிரதானமாகக்குவதன் மூலம், ஜனநாயக உரிமைகளும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

இறுதியாக, ஆப்கானிஸ்தானுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் பாக்கிஸ்தான் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானின் கிழக்கு எல்லையில் அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படும் என்ற தவறான அறிகுறிகள் ஏற்பட்டுவிடக்கூடாது.

கேள்வி: வெள்ளை மாளிகையிலும், ஸ்விட்சர்லாந்திலும் ட்ரம்ப் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதேபோல, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரே நேரத்தில் இம்ரான் கானும் நரேந்திர மோடியும் தனது நல்ல நண்பர்கள் என்று அழைத்தார். தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது. இந்த ஒரே காரணத்திற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அதிக இடம் கொடுப்பது சரியா? அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற, தனது துருப்புக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறுவது முக்கியம்.

பதில்: ஒரு நாட்டிற்கு அழுத்தம் தர அமெரிக்காவுக்கு பல்வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக, மசூத் அசாரை தேடப்படும் குற்றவாளியாக பட்டியலிடுவதற்கு, FATF (நிதி நடவடிக்கை பணிக்குழு) மற்றும் சர்வதேச நாணய நிதியம் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரப்பட்டது.

சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர அமெரிக்காவுக்கு பல்வேறு வழிகள் உள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான உறவு என்றாலும்கூட பாகிஸ்தான் மென்மையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நம்பிக்கை மிகக்குறைவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருநாடுகளுக்குமிடையே முன்னிருந்த அளவிற்கு குருட்டு நம்பிக்கை இப்போது இல்லை.

கேள்வி: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவும் சமீபத்தில் பின்வாங்கிதை கண்டோம். இந்திய உயர் பங்குகளை வைத்து, அங்கு நாடாளுமன்ற கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு, சாலைகள் என பலவற்றில் இந்தியா முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அங்கு சாதகமான சூழ்நிலை அமையாது என்றால், இந்தியா தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய ஆப்கானிஸ்தானில் எப்படி முதலீடுகளை அதிகரிக்க முடியும்?

பதில்: இந்தியா தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பாது என்று நினைக்கிறேன். இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நான் நினைக்கிறேன், இதனால் பல விளைவுகள் ஏற்படலாம். இந்தியாவுக்கும்-ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்னை இதன் மூலம், அது இந்திவாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்னையாக மாறலாம். எனவே இந்தியா தனது படைகளை அங்கு அனுப்புவது விரும்பத்தக்கது அல்ல.

இதற்கு பதில் ஆப்கானிய பாதுகாப்புப் படையை வலுப்படுத்த தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை இந்தியா அளிக்கலாம். ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சியளிக்க நமது துணை ராணுவ படையில் சிலவற்றை அங்கு அழைத்துச்சென்றுள்ளோம். தேவையான பயிற்சியையும், உபகரணங்களையும் போர் விமானங்களையும் வழங்குவதே சிறந்த முடிவாக இருக்கும்.

கடந்த காலங்களில் நாம் அவர்களுக்கு சில ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளோம். உண்மையில், அவர்கள் வான்வெளி பாதுகாப்பில் பலவீனமாகவுள்ளனர். இதில் நாம் உதவலாம். அங்குள்ள அரசியல்வாதிகளை நாம் விரைவில் அணுக வேண்டும்.

நாம் இப்போது தலிபான்களை சமாளிக்கப் தேவையில்லை என்று கூறக்கூடாது. அங்கு ஆப்கானிஸ்தான் தேசியவாதம் உள்ளதா இல்லை, தலிபான் தேசியவாதம் உள்ளதா? வரும்காலங்களில் இது எதை நோக்கி செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாக்கிஸ்தானை முழுமையாக நம்பியிருப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

மேலும், அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்ட பின் அங்குள்ள சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

கேள்வி: இந்தியா தலிபான்கள் பிரச்னையில் பங்கெடுப்பது குறித்து முடிவு செய்யவே நீண்ட நேரம் எடுத்தது, இறுதியில் ஓய்வுபெற்ற இரண்டு தூதர்களை அதிகார்பூர்வமற்ற பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. நான் ஒரு ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேசினேன், அவர் வெளியுறவு குழுவின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். ரஷ்யாவை உட்படுத்தாத எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் ஆப்கானிஸ்தானில் வெற்றிபெறாது என்று அவர் நம்புகிறார். தலிபானுடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அல்லது ஈரானை இந்தியா பயன்படுத்த முடியுமா?

பதில்: ஈரான் தலிபான்களுடன் சில வழிமுறைகளில் தொடர்புகளை வைத்துள்ளது. அமெரிக்காவை கையாளும் ஒர் யுக்தியே இது. ஏனென்றால் அமெரிக்க இருப்பு குறித்து அவர்கள் மிகவும் கவலைகொள்கின்றனர். அவர்கள் தொடக்கத்தில் தலிபான்களை ஷியா எதிர்ப்பாளர்களாகவே கருதினர்.

இருப்பினும் அமெரிக்காவின் இருப்பு அங்கு தொடர்ந்ததால், வெறுவழியின்றி ஈரான் தலிபான்களுடன் தொடர்பில் இருந்தது. ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியா ரஷ்யா ஆகிய நாடுகளில் ஏற்படும் அமைதியற்ற சூழ்நிலை குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளது.

குறிப்பாக, போதைப்பொருள் வர்த்தகம் அங்கிருந்துதான் ரஷ்யாவுக்கு செல்கிறது. எனவே அவர்களை தொடர்ந்து ரஷ்யா கண்காணிக்கும். தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் அவர்கள் பங்கு வகிக்க முயன்றனர். இது தொடரும் என்றே நினைக்கிறேன். மேலும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுளுடனும் இந்தியா தொடர்பில் இருக்கும்.

இதையும் படிங்க: 'டெல்லி போன்ற கலவரங்கள் அரசியல் நோக்கங்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது' - கபில் சிபல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.