கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.
மே மாத தொடக்கத்தில் சீனா தொடங்கி வைத்த இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையே ராணுவ, தூதரக அளவில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலர் அலிஸ் வெல்ஸ், “இந்திய இறையாண்மையை சீண்டும் சீனாவுக்கு எதிரான மோதலில், இந்தியாவுடன் அமெரிக்கா உடன் நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'கரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம்'