கரோனா பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம்சாட்டிவந்த அதிபர் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை (மே29) அந்த அமைப்புடனான உறவை முறித்துக் கொள்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
உலக சுகாதார அமைப்பின் மிகப் பெரும் பங்காளரான அமெரிக்க இவ்வாறு அறிவித்தது, உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபாக கடந்த 2017ஆம் ஆண்டு ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, அந்நாடு பல்வேறு சர்வதேச அமைப்புகள், ஒப்பந்தங்களிலிருந்து தன்னிச்சையாக வெளியேறியுள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்...
பாரிஸ் ஒப்பந்தம் : 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பு : ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று சில மாதங்களில் டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகியது.
யுனெஸ்கோ : யூனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் ட்ரம்ப் 2017ல் அறிவித்தார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் : ஈரானுடனான முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து 2018 மே மாதம் அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறியது.
ஐநா மனித உரிமை கவுன்சில் : 2018 ஜூன் மாதம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ட்ரம்ப் விலகினார்.
ஐநா நிவாரண மற்றும் பணிகள் முகமையம் : பாலஸ்தீனத்துக்கான ஐநா நிவாரண மற்றும் பணிகள் முகமையகத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார் ட்ரம்ப்.
யூனிவர்சல் போஸ்டல் கோட் : சர்வதேச தபால் துறை குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கும் யூனிவர்சல் போஸ்டல் கோட் அமைப்பிலிருந்து ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியது.
இதையும் படிங்க : அமெரிக்கா இனப்பாகுபாடு காட்டுகிறது - சீனா குற்றச்சாட்டு