அமெரிக்காவின் இணை அரசு வழக்கறிஞராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தா என்பவர் தேர்வாகியுள்ளார். அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தனது ஜனநாயகக் கட்சியின் சார்பில் வனிதா குப்தாவை அரசு இணை வழக்கறிஞர் பதவிக்கு முன்மொழிந்தார். இதையடுத்து அந்நாட்டின் மேலவையான செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 51-49 என்ற கணக்கில் வனிதா குப்தா வெற்றி பெற்று தேர்வாகியுள்ளார்.
இவருக்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த மூத்த மேலவை உறுப்பினர் லிசா முர்கோஸ்கியின் ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த உயர் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்க இந்தியர் என்ற பெருமை வனிதா குப்தாவுக்குக் கிடைத்துள்ளது.
முன்னாள் அதிபர் பாரக் ஓபாமாவின் பதவிக்காலத்தின்போது வனிதா குப்தா அந்நாட்டின் சிவில் உரிமை பிரிவின் கீழ் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.