ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல்: குழப்பத்தில் ட்ரம்ப் - குழப்பக் கடலில் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பல சிக்கல்களைச் சந்தித்துவரும் ட்ரம்ப் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளார். இந்தச் சூழலில், தேர்தல் களம் எப்படி இருக்கிறது, நிலைமை யாருக்குச் சாதகமாக உள்ளது? என்பன குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

Us presidential election
Us presidential election
author img

By

Published : Jun 23, 2020, 12:52 PM IST

தேர்தல் களம்

கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் பரப்புரையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) ஒக்லஹோமா மாகாணத்தில் தொடங்கிவைத்தார்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் பரப்புரை நடந்த அரங்கில் பெரிதாகக் கூட்டம் கூடவில்லை. இது அதிபர் ட்ரம்ப்பையும், அவரது கட்சியினரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியது.

இதற்கிடையே, ட்ரம்ப்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் 'தி ரூம் வேர் இட் ஹேப்பெண்ட்' (The Room Where It Happened) புத்தகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23ஆம் தேதி) வெளிவரவுள்ளது. ட்ரம்ப்பின் நிர்வாகத் திறமையைக் கேள்வி எழுப்புவதே இந்தப் புத்தகத்தின் சாரம்சமாகும்.

இப்படியாகப் பல சிக்கல்களை எதிர்கொண்டும்வரும் ட்ரம்ப் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ள சூழலில், நியூயார்க், கென்டகி மாகாணங்களில் ஜூன் 23ஆம் தேதி பிரைமரி தேர்தல் (வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்) நடைபெறவுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நியாயமாகத் தேர்தல் நடத்த முடியுமா என்பதை

ஒக்லஹோமாவில் என்ன நடந்தது?

ஒக்லஹோமாவில் நடந்த ட்ரம்ப்பின் தேர்தல் பரப்புரைக்கு எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே கூட்டம் கூடியது. பரப்புரை நடந்த அரங்கே காலியாகக் காட்சியளித்தது. கூட்டத்தை ஈர்க்கும் ட்ரம்ப்பின் திறமையை இது கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? கரோனா பெருந்தொற்று, நிறவெறிக்கு எதிரான போராட்டம், கேலி, கிண்டல் மீதான பயத்தால் கூட்டம் கூடவில்லையா, அல்லது ட்ரம்ப்பின் ஆதரவு அலை குறைந்துவருவதற்கான அறிகுறியாக இதனை நாம் பார்க்க வேண்டுமா?

ஆதரவாளர்களால் அரங்கை மூழ்கடிப்பதில் மிகுந்து விருப்பம் கொண்ட ஒரு அதிபருக்கு இது பெரும் அவமானமாக இருந்திருக்கும்.

வரும் நாள்களில் ட்ரம்ப்பின் தேர்தல் பரப்புரை அலுவலர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்திக்கொள்வது அதிகரிக்கப் போகிறது.

வாக்களிப்பதில் பிரச்னை எழுமா?

பெருந்தொற்றுக்கு இடையே நியாயமான தேர்தல் நடத்தக்கூடிய திறமை அந்நாட்டுத் தேர்தல் அமைப்புக்கு உண்டா என்பது நியூயார்க், கென்டகி மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள பிரைமரி தேர்தலில் தெரிந்துவிடும்.

ஜார்ஜியா, பென்சில்வேனியா, நிவாடா மாகாணங்களில் பிரைமரி தேர்தல் வாக்கெடுப்பின்போது நடந்த குளறுபடி தேர்தல் வல்லுநர்களைக் கவலையில் ஆழ்ந்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஜார்ஜியாவில் நடந்த பிரைமரி தேர்தலில் வாக்களிக்கச் சென்றவர்கள் மிக நீண்ட வரிசையில் ஐந்து மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. இது ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தினரையே அதிகம் பாதித்தது.

அமி மெக்ராத், பிரதிநிதிகள் (கீழ்) சபை உறுப்பினர் சார்லஸ் புக்கர் ஆகியோரில் யாருக்கு அதிகம் ஆதரவு இருப்பதென்பது இந்த வாரம் கென்டகியில் நடக்கவுள்ள தேர்தலில் தெரிந்துவிடும்.

நியூயார்க்கில் பார்த்தோமேயானால் முன்னாள் பள்ளி முதல்வர் ஜமால் பிரவ்மேன், பிரதிநிதிகள் சபை தேர்தலில் நான்கு முறை வெற்றிபெற்ற எலியட் அஞ்சலை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிடனின் வயது குறிவைப்பு

இதுவரை ட்ரம்ப் மேற்கொண்ட பெரும்பாலான பரப்புரைகளில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் வயதையும், ஆரோக்கியத்தையும், மனத்திடத்தையும் குறிவைத்து தாக்கிவருகிறார்.

இந்த வாரம் ட்ரம்ப் சார்பாக வெளியிடப்பட்ட இணையதளத்தில், "He is barely there" என ஜோ பிடன் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜோ பிடன் சந்தித்த அரசியல் சொதப்பல்களைச் சுட்டிக்காட்டியும், அவருக்கு மூளையில் கோளாறு இருப்பதாகவும் அந்த இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சில மூத்த அமெரிக்கர்களை ஜோ பிடன் தன் வசம் ஈர்த்துள்ளார் என்பதை ட்ரம்ப் நன்கு அறிவார். இந்த நிலை தொடர்ந்தால் அதிபர தேர்தலில் ட்ரம்ப்புக்கு பின்னடைவு ஏற்படும்.

ஆகையால், ஜோ பிடனை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ட்ரம்ப் எந்த அளவிற்கும் எடுத்துச் செல்வார்.

இதையும் படிங்க : 'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.