ETV Bharat / international

கரோனா உயிரிழப்பு: இத்தாலியை விஞ்சிய அமெரிக்கா! - கோவிட் 19 தொற்று உயிரிழப்புகள்

கோவிட் 19 தொற்றால் அமெரிக்காவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததன் மூலம், உலகளவில் அதிகம் இறப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இத்தாலியை விஞ்சியுள்ளது.

US now has highest COVID-19 deaths, surpasses Italy: Johns Hopkins

author img

By

Published : Apr 12, 2020, 10:36 AM IST

Updated : Apr 12, 2020, 10:42 AM IST

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, அமரிக்காவில் இதன் தாக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் இத்தொற்றால் 1,830 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் ஏறத்தாழ 8,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,577ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம், கோவிட் 19 தொற்றால் உலகளவில் அதிக இறப்புகள் ஏற்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருந்த இத்தாலியை தற்போது அமெரிக்கா விஞ்சியுள்ளது.

அமெரிக்காவுக்கு முன்னதாக மோசமான உயிரிழப்புகளை பதிவுசெய்து வந்த இத்தாலியில் கடந்த சில நாள்களாக இறப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. இத்தாலியில் நேற்று 619 பேர் உயிரிழந்ததன் மூலம், அதன் மொத்த எண்ணிக்கை 19,468ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், இத்தொற்றால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில், 32, 543 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட் 19 தொற்று பரவல் மையமாக விளங்கும் நியூயார்க் நகரில் நேற்று ஒருநாளில் மட்டும் 783 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,627ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: இத்தாலியில் பூட்டுதல் மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு

Last Updated : Apr 12, 2020, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.