அமெரிக்காவின் தடுப்பூசி உற்பத்தி குறித்து பெருந்தொற்று நிபுணர் ஆண்டனி பாச்சி அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை நடத்தினார்.
இம்மாதம் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால், அடுத்த அலை வருவதை தடுக்க அமெரிக்கா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தடுப்பூசிகள் தயாரிப்பு
இந்நிலையில், மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆண்டனி பாச்சி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், "சுமார் ஒன்பது கோடி அமெரிக்கர்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
இனிவரும் காலங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படும். உருமாறிய கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர விஞ்ஞானிகள் ஆய்வில் இறங்கியுள்ளனர்.
மேலும், தடுப்பூசி உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தாலிபான் ஆட்சி எதிரொலி - ஹிஜாப், டர்பன் விலை கிடுகிடு உயர்வு