மியான்மரில் ரோஹிங்கிய இன மக்களுக்கு எதிராக அரசுப் படை தாக்ககுதல் நடத்தியது. மேலும் இது தொடர்பான ஆவணங்களை முறைகேடாக ராய்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டு பத்திரிகையாளர்கள் பெற்றதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், வா லோன், கியா சியோ ஆகிய இரண்டு பேருக்கும் தலா ஏழு ஆண்டு சிறை தண்டணை விதித்து யாங்கூன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, இதனை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இவர்கள் தரப்பில் செய்த மேல்முறையீடு மனு ரத்து செய்யப்பட்டதோடு, ஏழு ஆண்டு சிறை தண்டணையும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், மியான்மர் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அமெரிக்க தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெயிட்டுள்ள அறிக்கையில், " புகழ்பெற்ற புலிட்சர் விருது அறிவிக்கப்பட்ட இரண்டு பத்திகையாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல். இதணன் மூலம் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது " என இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.