'தி ஃபைட் இஸ் வித் இன் அஸ்' என்ற முழக்கத்தின் கீழ் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்காவில் பிளாஸ்மை நன்கொடையாக பெறுவதற்கு 1,500க்கும் மேற்பட்ட இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கரோனாவுக்கு எதிரான போராடத்தில், கரோனாவிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாவைப் பயன்படுத்துவது, ஹைப்பர் இம்யூன் குளோபுலின் மருந்தின் வளர்ச்சிக்காக இந்தாண்டின் இறுதியில் மருத்துவ பரிசோதனைகளுக்கு திட்டமிடுவது என இரண்டு வித்தியாசமான அணுகுமுறையை இந்தப் பரப்புரைக் கொண்டுள்ளது. இந்தப் பரப்புரை அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும் இது ஐரோப்பாவுக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பரப்புரை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கரோனாவிலிருந்து மீண்டவர்கள் வைரஸை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் தங்களது பிளாஸ்மாவை நன்கொடையாக தாருங்கள் என்றும் 'சூப்பர் ஹீரோ' போன்று பிளாஸ்மா நன்கொடையாளர்கள் தற்போது சாத்தியமான உதவிகளைச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்தப் பரப்புரை குறித்து மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள TheFightIsInUs.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒக்லஹோமாவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் - நிறவெறிப் போராட்டக்காரர்கள் இடையே மோதல்!