ETV Bharat / international

அம்பேத்கரிய எழுத்தாளர் கெயில் ஓம்வெட் மறைவு - அம்பேத்கரியம் எழுத்தாளர் கெயில் ஓம்வெட் மறைவு

அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் உள்ள பட்டியலின (தலித்) மக்களுக்காக ஆராய்ச்சிகள் பல நடத்தி, அவர்களின் வாழ்வு மேம்பட குரல்கள் எழுப்பியதோடு அம்பேத்கரியம் மற்றும் தலித் பேரியக்கம் சார்ந்து பல்வேறு நூல்களை எழுதிய பிரபல எழுத்தாளரும், ஆராய்ச்சியாளருமான முனைவர் கெயில் ஓம்வெட் காலமானார்.

Gail Omvedt
Gail Omvedt
author img

By

Published : Aug 25, 2021, 4:19 PM IST

Updated : Aug 25, 2021, 4:56 PM IST

சாங்லி (மகாராஷ்டிரா) : அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் முனைவர் கெயில் ஓம்வெட் (Gail Omvedt). இவர் இந்தியரான முனைவர் பரத் பதங்கர் (Bharat Patankar) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார்.

பட்டியலின மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பல்வேறு ஆராய்ச்சிகளை கணவரும்- மனைவியும் சேர்ந்து நடத்தியுள்ளனர். இவர் அம்பேத்கரியம் மற்றும் தலித் பேரியக்கம் சார்ந்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் கெயில் ஓம்வெட் தனது 81ஆவது வயதில் இன்று காலமானார். கெயில் ஓம்வெட் அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) நகரில் பிறந்தவர்.

தனது உயர்கல்வி படிப்புக்காக இந்தியா வந்தபோது பட்டியலின பெண்கள், குழந்தைகள் படும் வேதனை, துன்பங்களை பார்த்து அவர்களின் முன்னேற்றத்திற்காக ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

இந்தியரான பரத் பதங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியர் பட்டியலின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு இயக்கங்களை தோற்றுவித்தனர். அதில் ஷ்ராமிக் முக்தி இயக்கம் முக்கியமானது.

இந்நிலையில், கெயில் ஓம்வெட்க்கு 1983இல் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவர் சமூகங்கள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.

இது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம், ஆக்ஸ்பாம் நோவிப் (Oxfam NOVIB) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் பணியாற்றினார்.

முனைவர் கெயில் ஓம்வெட் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஆக.26) காலை சாங்லியில் உள்ள கிராந்திவீர் பாபுஜி பதன்கர் சன்ஸ்தா வளாகத்தில் நடக்கிறது.

அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான முனைவர் கெயில் ஓம்வெட், கணவர் பரத் பதங்கர், மகள் பிராச்சி, மருமகன் தேஜஸ்வி மற்றும் பேத்தி நியா ஆகியோருடன் அமெரிக்காவில் குடியேறினர்.

தற்போது இந்தியா வந்துள்ள நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இவர், “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இந்தியாவின் அறிவொளி அம்பேத்கர், பிராமணர்கள் மற்றும் சாதிகளுக்கு எதிராக இந்தியாவில் புத்தரிஸம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை மீட்கும் வரை போராட்டம் தொடரும்- சமநீதி கழகம்

Last Updated : Aug 25, 2021, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.