ஈரானின் அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா ஆட்சிக்காலத்தில் முழுமையான கூட்டு செயல்திட்டம் என்ற உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், அடுத்து அதிபரான டொனால்டு டிரம்ப், பரப்புரையின்போதே அந்த உடன்பாட்டைக் குலைப்பதாக உறுதியே அளித்திருந்தார்.
இது, ஒரு முடிவின் தொடக்கம். அந்த அணுசக்தி உடன்பாட்டிலிருந்து டிரம்ப் விலகியதிலிருந்து, ஈரான் மீது பரவலான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுப்பதுமாதுமாகவும் செயல்தந்திரங்களில் அமெரிக்கா ஈடுபட்டுவருகிறது.
ஏற்கெனவே முறுகல்நிலைக்குப் போயிருக்கும் சியா - சன்னி முஸ்லிம் பிரிவினையைப் பயன்படுத்தி புதிய தவறான வழிகளில் இறங்கியது.
சவுதி, இஸ்ரேலுக்கு இடையிலிருந்துவரும் பகைமையை மறைமுகமாக அதிகரிக்கவும்செய்தது. டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் தலைமையில் இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்பட்ட மாற்றமானது, வளைகுடாவில் உள்ள அதன் அண்டை நாடுகளையும் இணைத்தது.
ஆனால் ஈரான் விவகாரமானது ஏற்கெனவே பல மோதல் போக்குகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பிராந்தியத்தில் ஈரானின் பங்களிப்பும் ஆதிக்கமும் மிகத் தெளிவானது.
லிபியா, ஏமன், ஈராக், காசா, சிரியா மற்றும் இலெபனான் ஆகியவை அமெரிக்க நலன்களுக்கு எதிரானவை. ஈரான் அரசானது, அரசபடைகள் அல்லாத ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹௌதிஸ் மற்றும் ஈராக்கில் உள்ள சியா மிலிசியா ஆகிய ஆயுதக்குழுக்கள் மற்றும் அதன் செல்வாக்குக்குத் துணைநிற்கும் இருக்கும் பல குழுக்களுடன் நெருக்கத்தைப் பேணிவருகிறது.
அணுசக்தி தொடர்பான முழுமையான கூட்டு செயல்திட்டத்திலிருந்து அமெரிக்கா விலகியதானது, வர்த்தகம் மற்றும் எரிபொருளைக் கொண்டுசெல்வது ஆகியவற்றை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
பாரசீக வளைகுடாவில் கடல் மோதல்களுக்கும் ஹோர்மஸ் நீரிணையில் பல சம்பவங்களுக்கும் காரணமாகியது. வளைகுடா பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல கப்பல்கள் மற்றும் சவுதியின் பெட்ரோலிய வளங்கள் மீதான டிரோன் தாக்குதலுக்கு நல்லவேளை, நேரடி எதிர்வினை எதுவும் இல்லை.
ஆனால், அப்போதே ஈரானின் அல் குத்சு படைகளின் தளபதி காசின் சுலைமானியைப் படுகொலை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அமெரிக்க ஒப்பந்தகாரரை ராணுவத் தாக்குதலில் கொன்றதற்கான பழிவாங்கலாக டிரம்ப் இம்முடிவை எடுத்துள்ளார்.
சுலைமானியுடன் ஈரானிய ஆதரவு போராளிக்குழுத் தலைவர் அல் முகனாதியும் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஒரு நாட்டின் பணியிலிருக்கும் படைத்தளபதியை அந்நிய அரசுகள் கொலைசெய்வது என்பது அபாயக்கோட்டை அப்பட்டமாக மீறுவதாகும். இது, பரஸ்பர உடன்பாட்டுக்கு விரோதமும் கூட!
இரு தரப்பிலும் போரைத் தவிர்ப்பதற்க்காக இடைப்பட்ட பொதுத் தரப்பினர் மூலம் பேச்சுவார்த்தை, புரிந்துணர்வுக்கான வழிகளில் இறங்கியிருந்த நிலையில், நிலைமை இப்படி ஆகிவிட்டது.
ஈரானில் ஏற்பட்ட அதிர்ச்சியும் துயரமும் மெய்யானது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட பெரும் மக்கள் கூட்டமும் அதில் அவரின் சாவுக்கு பழிவாங்கியே தீருவோம் என அனைவரும் முழங்கியதும் இதற்கு சான்றாகும்.
டுவிட்டர் தளத்தில் ஏற்கெனவே சண்டை தீவிரமாக உள்ளது. உண்மையில், அதன் நீட்சியாக பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலைதான் காணப்படுகிறது.
ஈரானின் சிறப்புத்தலைவர் அயதுல்லா கொமேனியும் மற்ற தலைவர்களும் பதிலடி தரவும் பழிவாங்கவும் சபதமெடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.
ஈராக்கிலிருந்து அமெரிக்கர்களையும், அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தன்னிச்சையான, பொறுப்பற்ற டிரோன் தாக்குதலானது ஈராக்கின் இறையாண்மையை மீறிவிட்டதால், ஈராக் அரசானது தன் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது.
ஈராக்கிய நாடாளுமன்றம், அமெரிக்கப் படைகளை வெளியேறுமாறு தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவுக்கு பூகோள அரசியல் மூலவுத்தி இழப்பாகும்.
இதுவரை, இந்த வட்டாரத்தில் தன் ராணுவ இருப்பைத் தக்கவைப்பது குறித்து அமெரிக்கா தெளிவில்லாமல் இருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து சிரியாவுக்கு படைகளைத் திரும்பப்பெறும் நிலையிலிருந்தது.
ஆனால் இதுவும் முன்னர் நடந்த சில நிகழ்வுகளும் விபத்துகளும் அதன் இராணுவ இருப்பைக் கட்டுப்படுத்துவதை நோக்கித் தள்ளப்பட்டது.
அது, அமெரிக்காவின் சொத்துகளுக்கும் நலன்களுக்கும் அபாயம் ஏற்படுவதைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச்செய்தது.
இது குறித்து அமெரிக்கத் தரப்பில் கருத்துத் தெரிவித்த அதன் செயலாளர் பாம்பியோ, சுலைமானி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார்.
எந்த அளவுக்கு என்றால், “ உலகம் இப்போது பாதுகாப்பான இடமாக ஆகிவிட்டது. சுலைமானி இந்தப் புவிக்கோளத்தில் எங்கும் இருக்கமாட்டார்.
அமெரிக்காவுக்கும் அதன் எதிர்காலத் திட்டங்களுக்கும் எதிராக பயங்கரவாத பரப்புரையில் சுலைமானி ஈடுபட்டிருந்ததற்கு அதிபர் டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் சரியான முடிவை எடுத்துள்ளார்” என்று பாம்பியோ கூறினார்.
ஈரான் தரப்பில் பழிவாங்குவதாகச் சொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் 52 பண்பாட்டுச் சின்னங்களை இலக்குவைத்து அழிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. ஆனால், இதில் சமமான சரியான எதிர்வினையாக இல்லாமல் இருக்கக்கூடும்.
எப்படியோ, ஈரானிய ஆதரவு போராளிக் குழுக்கள், தனிப்பட்ட பழிவாங்கல் திட்டங்களோடு இருக்கக்கூடும். அமெரிக்காவின் அனைத்து கூட்டணி நாடுகள் கட்டுப்பாட்டையும் விரிவாதிக்கத் தடுப்பையும் வலியுறுத்தியுள்ளன. ஏனெனில், இந்த வட்டாரத்தில் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளால் சிதறடிக்கப்பட்டாலும்கூட, எந்த நாடும் தாங்கிக்கொள்ளமுடியாத மோசமான விளைவுகளையே போரானது உண்டாக்கும்.
இப்போது அனைத்து தரப்பிலிருந்தும் சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சேதாரம் தொடங்கிவிட்டது. செறிவூட்டல் நோக்கத்துக்காக மையவிலக்குகளைப் பயன்படுத்த ஈரானுக்கு மேலும் வசதியாகிவிட்டது. அமெரிக்காவுடன் அதன் உறவு முறிவு என்பது ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது.
இது, அதற்கே உரிய நெடிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உலகளாவிய அமைதி, பொருளாதாரம், உறுதித்தன்மைக்கு பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும்படியாக உலக வழங்கல் கண்ணியை சீர்குலைக்கும் அளவுக்கு இந்த வட்டாரத்தின் புதிய ஆதிக்கச் சமன்பாடுகள், நீடிக்கும் கொதிநிலைக்கு சக்தி உள்ளது எனும் உண்மையையும் இது காட்டுகிறது.
பெட்ரோலிய விலை உயர்வானது அமெரிக்கா உள்பட்ட சில தரப்பினருக்கு உதவக்கூடும். ஆனால், அதன் நட்புநாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியதாகவே அமையும்.
சில வேளை, உண்மையான அரசியலானது சம்பந்தப்பட்ட நாடுகளிடையே மேலும் மோதல்போக்கை அதிகரிக்காமல் இருக்காதபடி அந்தந்த நாட்டுத் தலைமைகளை ஆக்கவும் சமாதானத்துக்கும் வாய்ப்பு உள்ளது என நம்புவோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக அளவில் புலம்பெயர்ந்துள்ள குடிமக்களையும் எரிபொருள் தேவைகளுக்காகவும் இதில் அதிகம் கவலைப்படவேண்டியுள்ளது.
இதனால் இது குறித்து அமெரிக்கா, ஈரான், ஓமானிய வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் சாரிஃப் இரசீனாவுடன் அடுத்த வாரம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ராஜதந்திரமானது லாபம் தரக்கூடியதாக இருக்கும் என்பதால், அதற்கு முன்னதாக அவர், டெல்லியில் இறங்கிச்செல்லவும் வாய்ப்பு உண்டு.
தற்போதைய நிலையில் போருக்கான தொடக்கத்தைத் தவிர்ப்பதற்காக அனைத்து தரப்பு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன; ஆனால், அரசுகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் பதற்றத்தை முடுக்கிவிடவும் வாய்ப்பு உண்டு.
இதையும் படிங்க...இந்தியர்கள் ஈராக் செல்ல வேண்டாம் - வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்