ETV Bharat / international

இலங்கைக்கு உதவும் அமெரிக்க தொண்டு நிறுவனம்! - aid agency

வாஷிங்டன்: தொடர் வெடிகுண்டு தாக்குதலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 480 மில்லியன் டாலரை உதவி தொகையை அமெரிக்காவின் தொண்டு நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவும் அமெரிக்க தொண்டு நிறுவனம்
author img

By

Published : May 17, 2019, 11:53 PM IST

இலங்கையில் கடந்த ஏப்.21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், நட்சத்திர விடுதி ஆகியவற்றில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, தொடர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சமீபத்தில் இரு மதத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு ராணுவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரப்பன சநதித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இது தொடர்பாக பாம்பியோ தரப்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது. அதில், "கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். இலங்கைக்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கும். அமெரிக்காவின் ஆதரவுக்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரப்பன் தனது பாராட்டுக்களை தெரிவித்தார் " என குறிப்பிப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எம்சிசி என்னும் அமெரிக்க தொண்டு நிறுவனம், 480 மில்லியன் டாலரை உதவி தொகையாக வழங்குவதற்கு பாம்பியோ, திலக் மரப்பான ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.