ETV Bharat / international

பொலிவியாவின் அமைதியற்ற சூழல் குறித்து ஐநா கவலை! - bolivia news in tamil

பொலிவியா நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரெஸ்
author img

By

Published : Nov 11, 2019, 2:27 PM IST

பொலிவியா நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியதிலிருந்து அரசுத் துறைகளைச் சேர்ந்த பலரும் போராடும் மக்களுடன் சேர்ந்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்தனர். இது ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து அதிபரும் துணை அதிபரும் நேற்று பதவி விலகிய நிலையில் (நவம்பர் 10, 2019), பொலிவியாவில் நிலவும் அமைதியற்ற சூழல் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்டோனியோ குட்டரெஸின் கருத்து குறித்து பேசிய ஐநா செய்தித்தொடர்பாளர், “பொலிவியா நாட்டில் தற்போது நெருக்கடிக்கு உள்ளான அடிப்படை மனித உரிமை கொள்கைகள் அமைதியான தீர்வை எட்டுவதற்கு வெளிப்படையான, நம்பகமான தேர்தல் நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெயிண்டருக்கு அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் இரண்டரை கோடி பரிசு!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபராக இருக்கும் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடதுசாரி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் மொத்தம் 88.31 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

United Nations chief expresses, United Nations Secretary General Antonio Guterres, ஐநா தலைவர் கவலை, ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரெஸ், world news in tamil, bolivia news in tamil, பொலிவியாவின் மக்கள் போராட்டம்
பொலிவியாவின் மக்கள் போராட்டம்

இதில் இவோ மோரல்ஸ் 47.07 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்தினம் தான் வெற்றிபெற்றதாக இவா மோரல்ஸ் அறிவித்துக்கொண்டார்.

இதனால் இந்தத் தேர்தல் முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அதிபராக இருந்த இவா மோரல்ஸ் அவசர கூட்டத்தை நடத்த வேண்டி, நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன.

நவாஸ் ஷெரீஃப் உடல்நிலை கவலைக்கிடம்!

இந்தச் சூழலில், அவசர கூட்டத்தை நடத்த வேண்டி போராட்டக்காரர்களுடன் காவல் துறையினரும் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் பொதுமக்களுடன் காவல் துறையினரும் இணைந்ததால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி அதிபர் இவோ மாரல்ஸும் துணை அதிபர் அல்வாரோ கார்சியோ ஆகிய இருவரும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.