74ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாரம்பரியம், தத்துவம், வளர்ச்சி குறித்து உலகத் தலைவர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது, தேசிய மகாகவிஞர் கணியன் பூங்குன்றனார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகிற்கு எடுத்துரைத்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை அவ்வப்போது குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம்.