டெல்லி டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்கு வருத்தம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் ஊடகங்களிடம் வெளியிட்டார்.
அதில் இது போன்ற துரதிஷ்டமான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வருத்தம் அளிக்கிறது. மக்கள் கூடி தங்களின் குரலை வெளிப்படுத்தி போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. அதேவேளை, அந்த போராட்டம் அறவழியில் தான் இருக்க வேண்டும். அமைதி போராட்டம் ஒருபோதும் வன்முறை போராட்டமாக மாறக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசு தின விழா அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்த மோதலில் காவல்துறையினர் 86 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல்முறை: அணிவகுப்பில் போர் விமான சாகசம் புரிந்த பெண் விமானி