உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை ரஷ்யா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "ரஷ்யா உளவுத்துறையைச் சேர்ந்த கோஸி பியர் ஹேக்கிங்( Cozy Bear )அமைப்பு, கரோனா தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவலை திருட முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இது மற்ற நாடுகளின் ஆராய்ச்சியை சீர்குலைப்பது மட்டுமின்றி விஞ்ஞானிகளின் அறிவினை திருடும் முயற்சியாக பார்க்கப்படுகிறது" என அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளனர்.