ETV Bharat / international

50% பெண் ஊழியர்கள் என்ற இலக்கை நோக்கி ட்விட்டர் - ட்விட்டர் நிறுவன பெண் ஊழியர்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 42.6 சதவிகிதம் பேர் பெண்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்களை அதிகரிக்கும் ட்விட்டர்
பெண் ஊழியர்களை அதிகரிக்கும் ட்விட்டர்
author img

By

Published : Dec 11, 2020, 9:03 PM IST

டெல்லி: ட்விட்டர் நிறுவனத்தில் பணிப்புரியம் மொத்த ஊழியர்களில் 42.6 சதவிகிதம் பேர் பெண்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 38.2 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும், அதேபோல் தொழிநுட்ப பொறுப்புகளில் இருப்பவர்களில் 25.8 சதவிகிதம் பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டுக்குள் ட்விட்டர் நிறுவனத்தில் பணிப்புரியம் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்த பாதையில், தற்போது பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 42 சதவிதிதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நிறுவனத்தின் தொழிலாளர் பிரதிநிதித்துவ இலக்கு நோக்கிய செயல்பாடுகளை செய்யும் விதமாக, ரியல் டைம் டேட்டா டிராக்கிங் டேஷ்போர்டினை உருவாக்கியது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ஊழியர் சேர்த்தல் மற்றும் பன்முகத் தன்மைத் தலைவர் டலானா பிராண்ட் கூறுகையில், "பாலின வேறுபாடுகளை களையச் செய்வது தான் எங்களது முதல் இலக்கு. எனவே நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆண்டு அறிக்கை அடுத்த ஆண்டு பகிரப்படும். ஊதியம் வழங்கும் முறையிலும் வெளிப்படைதன்மையை கொண்டுவரும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

எந்த பதவியாக இருந்தாலும், ஒரு பெண் (சர்வதேச நாடுகளைச் சேர்ந்த) ,ஒரு கருப்பினப்பெண் அல்லது லத்தின் அமெரிக்கா பெண்ணை தேர்வு செய்ய வேண்டும் என தேர்வு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கலைடோஸ்கோப்பை கண்டுபிடித்த டேவிட் புரூஸ்டர் பற்றி தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.