ETV Bharat / international

டிக்டாக்கை வாங்க களமிறங்கிய ட்விட்டர்! - டிக்டாக் செயலி

வாஷிங்டன்: டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க ட்விட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

tweet
weet
author img

By

Published : Aug 9, 2020, 7:15 PM IST

சமீப காலங்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை அமெரிக்கா மூடியது. ஆனால், சில நாள்களிலேயே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்க தூதரகத்தை மூடியது. இத்தகைய தொடர் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நோக்கில், சீனாவின் டிக்டாக் செயலிக்கு அதிபர் ட்ரம்ப் தடைவிதிக்க முடிவு செய்தார். இந்தத் தகவல் பரவத் தொடங்கியதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் களமிறங்க முடிவு செய்தனர். யாரும் எதிர்பாராத வகையில் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், வரும் செப்டம்பர் 15க்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இதற்கு முக்கியக் காரணம் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை, அமெரிக்க நிறுவனத்திடமே விற்க வேண்டும் அல்லது தடைவிதிக்க வேண்டும் என அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்தது தான் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவலை ட்விட்டர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இரண்டு ஜாம்பவான்கள் டிக்டாக் செயலியை வாங்கும் போட்டியில் களமிறங்கியுள்ளது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.