உலகில் பல்வேறு நாடுகளிலும் கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அரசு சார்பில் நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டுவந்தாலும், வைரஸ் தொற்று குறித்து தவறான தகவல்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவிவருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்திலும் பரவும் இதுபோன்ற தகவல்களை நீக்கவுள்ளதாக டவிட்டர் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வல்லுநர்களின் கருத்தை புறந்தள்ளும் வகையிலான ட்வீட்களும் உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் குறித்து பரப்பப்படும் தகவல்களும் ட்விட்டரிலிருந்து நீக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான மருந்துகள் எனச் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அவை மக்களின் உடல்நிலையை பாதிக்காது என்றாலும் அவற்றினால் ஒரு பயனும் இல்லை. எனவே, அதுபோன்ற ட்வீட்களும் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Content that increases the chance that someone contracts or transmits the virus, including:
— Twitter Safety (@TwitterSafety) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
- Denial of expert guidance
- Encouragement to use fake or ineffective treatments, preventions, and diagnostic techniques
- Misleading content purporting to be from experts or authorities
">Content that increases the chance that someone contracts or transmits the virus, including:
— Twitter Safety (@TwitterSafety) March 18, 2020
- Denial of expert guidance
- Encouragement to use fake or ineffective treatments, preventions, and diagnostic techniques
- Misleading content purporting to be from experts or authoritiesContent that increases the chance that someone contracts or transmits the virus, including:
— Twitter Safety (@TwitterSafety) March 18, 2020
- Denial of expert guidance
- Encouragement to use fake or ineffective treatments, preventions, and diagnostic techniques
- Misleading content purporting to be from experts or authorities
இதுமட்டுமின்றி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவதன் மூலம் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பது போன்ற ட்வீட்களும் நீக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - உதவி எண் அறிவித்த மத்திய அரசு!