அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அதிபர் ட்ரம்பின் ஆதரவாளரும் முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான டோமி லஹ்ரென், கேமியோ செயலி மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ”அமெரிக்கா மீது நீங்கள் வைத்துள்ள மதிப்பிற்கு நன்றி. நீங்கள் இந்தியில் சொல்வது போல் அதிபர் ட்ரம்ப் ஒரு ’உள்ளூ’ போன்ற புத்திசாலி” எனத் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால், இந்தி, உருது, பஞ்சாபி ஆகிய மொழிகளில் ’உள்ளூ’ என்பதற்கு ஆந்தை என்று பொருள். ஆனால், பேச்சு வழக்கில் "உள்ளூ" என்றால் "jackass" என்றே சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஒரு வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ள நிலையில், இந்த வார்த்தை கழுதையையோ அல்லது அறிவில்லாதவரையோ திட்டவே உபயோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை அவரது ஆதரவாளரே பாராட்டுவதாக நினைத்து, கலாய்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.