ETV Bharat / international

உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருக்கும் பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொண்டார்.

Trump
Trump
author img

By

Published : Jun 1, 2020, 3:08 PM IST

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பின அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது. குறிப்பாக, கரோனா பாதிப்பைக் கூட நீர்த்துப்போகும் விதமாக அந்நாட்டில் இந்தச் சம்பவம் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அந்நாட்டில் உள்ள பெரும் நகரங்கள் அனைத்திலும் ஜார்ஜின் மறைவுக்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தை மக்கள் நடத்திவருகின்றனர். இந்த போரட்டத்தின்போது ஆங்காங்கே கடும் வன்முறைச் சம்பவமும் நிகழ்ந்துவருகிறது.

இந்தப் போரட்டத்தின் தீவிரம் அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகை உஷார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள முகப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உஷாரடைந்த அதிபர் ட்ரம்பின் ரகசிய பாதுகாப்பு அலுவலர்கள், அவரை பாதுகாக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் பதுங்கு குழிக்கு அழைத்து சென்றனர். நிலைமை சீராகும்வரை சில மணிநேரம் அதிபர் ட்ரம்ப் பதுங்கு குழியிலேயே இருந்தார்.

பொதுவாக, பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அதிஅவசர நிலையில் மட்டுமே அதிபர் பதுங்கு குழியில் தங்கும் நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க: இன சமத்துவத்திற்கு ஆதரவு - சுந்தர் பிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.