ப்ளோரிடாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது என்றார். செய்திகளில் இது பரபரப்பாக பேசப்பட்டுவரும் வேளையில், தொற்று நோய் நிபுணர் ஃபௌசியை பணிநீக்கம் செய்யச் சொல்லி ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலரும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய ட்ரம்ப், கரோனா சூழலை மருத்துவக் குழுவினர் சரியாக கையாள தவறிவிட்டனர். தேர்தல் முடியும்வரைதான் பொறுத்திருப்பேன். எனது ஆதரவாளர்களாகிய உங்கள் கருத்துகளை மதிக்கிறேன் என்றார்.
தேர்தல் நாளுக்கு முன்பே ஃபௌசியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது ட்ரம்பின் விருப்பமாக இருந்தது. கரோனா சூழலில் முகக்கவசம் அணிவது தொடர்பான ட்ரம்பின் கருத்தை ஃபௌசி கடுமையாக விமர்சித்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.