ETV Bharat / international

மத்திய கிழக்கு திட்டம்: பாலஸ்தீனம், இஸ்ரேல் புதிய வரைபடம் வெளியீடு

வாஷிங்டன்: மத்திய கிழக்கு திட்டத்தின் அடிப்படையில் பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளில் புதிய வரைபடங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

trump
trump
author img

By

Published : Jan 29, 2020, 6:30 PM IST

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'மத்திய கிழக்கு திட்டம்' என்ற அமைதி திட்டத்தை நேற்று அறிவித்தார்.

வெள்ளைமாளிகையின் மூத்த ஆலோசகரும், ட்ரம்ப்பின் மருமகனுமான ஜராட் குஷ்னர் முயற்சியில் உருவான இந்தத் திட்டத்தின்படி, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்படும், அதே சமயம் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகராக அறிவிக்கப்படும், பாலஸ்தீனம் சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்படும், திட்டத்தின்கீழ் பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பகுதிகளில் நான்கு ஆண்டுகள் வரை இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) யாரும் குடியேறக் கூடாது.

ட்ரம்ப் வெளியிட்ட வரைபடம், அதிபர் ட்ரம்ப் மத்திய கிழக்கு திட்டம்,  Trump Middle East Peace Plan
ட்ரம்ப் வெளியிட்ட வரைபடம்

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளின் புதிய வரைபடங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில், 'எதிர்காலத்தில் பாலஸ்தீன நாடு இப்படித்தான் இருக்கும். அதன் தலைநகராக கிழக்கு ஜெருசேலம் விளங்கும்' எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு திட்டம் பாலஸ்தீனத்துக்கு எதிரான சதித் திட்டம் என அந்நாடு புறக்கணித்துள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்க - சீனா உறவும் வளரும் நாடுகளும்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.