அமெரிக்காவில் இந்தாண்டு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு கரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பரப்புரையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
துல்சா, ஒக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையை முடித்த ட்ரம்ப், கரோனா ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் அரிசோனா மாகாணத்திற்குச் சென்று மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் கட்டப்பட்ட சுவர் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தது என எல்லைச்சுவர் குறித்து பெருமிதத்துடன் பேசினார்.
அதையடுத்து எல்லைச் சுவரைப் பார்வையிட்ட அவர் அதன் மீது கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்திருந்த பல அரசு பிரதிநிதிகளும் தங்கள் கையெழுத்துகளை இட்டனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் உயிரிழப்பு!