2020-21ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையை முன்மொழிந்த அமெரிக்க அரசு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை, சர்வதேச வளர்ச்சி முகமையத்துக்கு சுமார் இரண்டு லட்சத்து 92 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளதாகக் அறிவித்துள்ளது. இந்த நிதி முந்தையை ஆண்டைவிட சுமார் 20 விழுக்காடு குறைவானது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவர் எலியட் என்ஜெல் கூறுகையில், "இந்த அடாவடித்தனமான நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு, தலைமைக்கு குந்தகம் விளைவிக்கும். இதனை நாடாளுமன்றம் கண்டிப்பாக நிராகரிக்கப்போகிறது" என்றார்.
இதையும் படிங்க : மீண்டும் ஆட்சிக் கட்டிலில் கெஜ்ரிவால் - குவியும் பாராட்டு!