அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரைகளில் அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இவர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் கரோனா தொற்றால் அதிபர் டர்ம்ப் பாதிக்கப்பட்டதால் சிறிது நாள்கள் பரப்புரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவர்களின் அதீத கவனிப்பால், கரோனாவிலிருந்து மீண்ட அதிபர் டர்ம்ப் தேர்தல் பரப்புரையில் மீண்டும் ஈடுபட தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று, விஸ்கான்சினின் ஜேன்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், "என்னால் என்ன தர முடியும். எனக்கு கிடைத்ததை உங்களுக்கு இலவசமாக வழங்க முடியும்.
கரோனாவை எதிர்கொள்ள எனக்கு கிடைத்த நோயெதிர்ப்பு சிகிச்சைகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என உறுதியளித்தார்.
முன்னதாக, மிச்சிகனில் உள்ள மஸ்கெகோனில் நடந்த மற்றொரு பேரணியில் பேசிய ட்ரம்ப், நவம்பர் தேர்தல்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் மிச்சிகனில் கரோனா வைரஸ் நிலைமை மோசமடையக்கூடும் என்றும், ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் அதன் பாதிப்பு இருக்கக்கூடும். தடுப்பூசி கிடைப்பதை தாமதம் படுத்திட அதிக வாய்ப்புள்ளது என மக்களை எச்சரித்தார்.
அதே போல், புளோரிடாவின் சான்ஃபோர்டில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கரோனாவிலிருந்த மீள எனக்கு கொடுத்த மருந்துகள் எதுவாக இருந்தாலும், அதனை அமெரிக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை பெறும் மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கரோனா தடுப்பூசியின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.