அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் மனைவி மெலினியா, கடந்த வெள்ளியன்று ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு, ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை இன்று காலை சந்தித்தார்.
சந்திப்புக்கு முன் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, "நானும், எனது மனைவியும் ஜப்பான் செல்லவிருக்கிறோம், அங்கு நான் என் நண்பன் ஷின்சோ அபேவை சந்திக்கவுள்ளேன். இருதரப்பு வர்த்தகம், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை மேம்பாட்டு வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப் வருகையால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் காலையில் சந்திக்கும்போது, இருவரும் பரஸ்பர மரியாதை செலுத்திக்கொண்டனர். பின்னர், இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்தனர்.