ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகள் மும்முரம் - ட்ரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: கரோனா வைரசுக்கு எதிரான மருந்துகள், தடுப்பூசிகள் உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

்ே்
்ே
author img

By

Published : May 16, 2020, 12:42 PM IST

கோர தாண்டவம் ஆடும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. பல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "உலக நாடுகளில் கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியானது ஆரம்பக்கட்ட சோதனை நிலையில் தான் உள்ளது. அமெரிக்காவில் இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி மருந்து கண்டுப்பிடிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் அதீத முயற்சியால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் சந்தைக்குக் கரோனா தடுப்பூசி மருந்தை கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள், ஜென்னர் உருவாக்கிய ChAdOx1 nCoV-19 தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி தயாரானதும், அமெரிக்க மக்களுக்கு விமானம், டிரக், வீரர்கள் மூலம் விரைவாக விநியோகிப்போம்" என்றார்.

அமெரிக்காவின் தேசியச் சுகாதார அமைப்பின்படி, உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து ACTIV எனப்படும் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.