ETV Bharat / international

அதிபர் தேர்தல் 2020: முக்கியத்துவம் வாய்ந்த பொது விவாதத்திற்கு தயாராகும் அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வேட்பாளர்களுக்கு இடையே முதல் பொது விவாதம் வரும் நாளை (அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 29ஆம் தேதி) நடைபெற உள்ளது.

Trump
Trump
author img

By

Published : Sep 29, 2020, 10:50 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வு நாளை (அமெரிக்க தேதிப்படி செப்.29) தொடங்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் அதிபர் வேட்பாளர்களின் முதல் பொது விவாதம் அந்நாட்டின் க்ளீவ்லாந்த் நகரில் நடைபெறுகிறது.

இதில், குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் நேரடி விவாதம் மேற்கொள்ள உள்ளனர். இந்த விவாதத்தின் நெறியாளராக பாக்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஸ் வாலாஸ் செயல்பட உள்ளார்.

விவாத நிகழ்வில் இரு வேட்பாளர்களும் கோவிட்-19 பரவல், பொருளாதாரம், உச்ச நீதிமன்றம், கருப்பின மக்கள் போராட்டம், சட்டம் ஒழுங்கு, வரிப் பிரச்னை உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இரு வேட்பாளர்களும் சுமார் 15 நிமிடங்கள் பேச வரையறை செய்யப்பட்டுள்ளது.

தற்போது கரோனா பாதிப்பு அதிகம் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், விவாதத்திற்கு முன்னதாக தற்காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: அர்மேனியா-அசர்பைஜான் இடையே வலுக்கும் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.