ETV Bharat / international

புலிட்சர் விருது பெற்றவர்கள் திருடர்கள் - செய்தியாளர்களை விமர்சித்த ட்ரம்ப் - ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மைக்கேல் ஃப்ளின் மீதான விசாரணை குறித்துச் செய்தி வெளியிட்டதற்கு புலிட்சர் விருது பெற்ற செய்தியாளர்கள் திருடர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

Trump
Trump
author img

By

Published : May 8, 2020, 10:41 AM IST

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், "அவர்கள் செய்தியாளர்கள் இல்லை, திருடர்கள். புலிட்சர் விருது பெற்ற செய்தியாளர்கள் அவ்விருதைத் திருப்பி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்று பார்த்தால் நமக்குப் புரியும் அவர்களது செய்திகள் தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் கோப்புகள் வெளிவந்துகொண்டிருக்கிறன.

புலிட்சர் விருது தவறானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவை அனைத்தும் திரும்பி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் வெளியிட்டவை அனைத்தும் போலி செய்திகள். தவறான தகவல்களைக் கொண்ட செய்திகளை வெளியிட்ட அவர்கள் புலிட்சர் விருதை திருப்பி அளிக்கவில்லை என்றால் அவர்கள் அவமானப்பட வேண்டும்.

புலிட்சர் விருது சரியான நபர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். யாருக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியலையும் நானே தருகிறேன். நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும்!" என்றார்

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மைக்கேல் ஃப்ளின் ரஷ்யாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் அவரை பணி நீக்கம் செய்தார். இருப்பினும் அதிபர் ட்ரம்ப், மைக்கேல் ஃப்ளினுக்கு ஆதரவாகவே இருந்துவருகிறார். இது குறித்து சிறப்பாக செய்தி வெளியிட்டு புலிட்சர் விருது பெற்றவர்களைத்தான் அமெரிக்க அதிபர் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர்,"மைக்கேல் ஃப்ளின் மிகச் சிறந்த மனிதர். ஒபாமா அரசு அவரை திட்டமிட்டுப் பழிவாங்கியது. ஒபாமா ஆட்சியில் நீதித்துறை அவமானகரமானதாக இருந்தது. அவர்கள் திட்டமிட்டு நேர்மையான நபர்கள் மீது விசாரணை நடத்தினர். இதற்கெல்லாம் அவர்கள் நாட்டு மக்களிடம் பதில் கூறியே ஆக வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை ஜெனரல் மைக்கேல் ஃப்ளின் மிகச் சிறந்த மனிதர். அவருக்கு நடந்தது வேறு யாருக்கும் எப்போதும் நடக்கக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் வேலையை இழந்த 2 கோடி மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.