அமெரிக்காவின் மினியோபோலிஸ் நகரில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், காவல் துறையினர் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு நீதி கோரியும், நிறவெறிக்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நிறவெறிக்கு எதிரான இந்த போராட்டம் பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கனடா தலைநகர் ஒடாவாவில் அமைந்துள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் எதிரே நிறவெறி போராட்டம் நடந்துகொண்டிருந்தது.
அப்போது, பலத்த பாதுகாப்புடன் கருப்பு முக்கவசம் அணிந்தவாறு அங்கு வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டக்காரர்களின் அழைப்பை ஏற்று ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுடன் சேர்ந்து சில நிமிடம் மண்டியிட்டார்.
இந்தச் சம்பவம் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, டொரென்டோ காவல் துறை தலைநகர் மார்க் சன்டர்ஸ் போராட்டக்காரர்களைச் சந்தித்து, தொப்பியைக் கழற்றி அவர்கள் முன்பு மண்டியிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : ட்ரம்ப் குறித்து கேள்வி : 21 நொடிகள் மௌனம் காத்த கனட பிரதமர்!