ETV Bharat / international

டென்னசி மாகாணத்தில் சூறாவளி: 25 பேர் உயிரிழப்பு - அமெரிக்க டென்னசி மாகாணம் சூறாவளி

அமெரிக்க நாட்டின் டென்னசி மாகாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பலத்த சூறாவளிக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

tornadoes in tennessee rips the houses in Putnam County

author img

By

Published : Mar 4, 2020, 12:45 PM IST

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான நாஷ்வில்லில் நேற்று திடீரென சூறாவளி தாத்கியது. இதில் அங்குள்ள வீடுகளும், பிற கட்டடங்களும் பெரும் சேதம் அடைந்தன. நள்ளிரவில் புயல் வேகமாக தாக்கிவிட்டுச் சென்றதால், பலருக்கு பாதுகாப்பான இடம் கிடைக்காமல் போனதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

tornadoes in tennessee rips the houses in Putnam County
இடிபாடுகளில் சிக்கிய நபரை மீட்கும் மீட்புப் படையினர்.

வரும் வெள்ளிகிழமை புயல் பாதித்த இடங்களை பார்வையிட, பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவசர நிலையை அறிவித்த ஆளுநர் பில் லீ, சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, மீட்புக் குழுவினை அனுப்பியுள்ளார்.

சூறாவளி தாக்கியதில் தரைமட்டமாகிப் போன வீடுகள்.

இதுவரை இந்தச் சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தச் சூறாவளியின் தாக்கம் புட்னம் கவுண்டி என்னும் பகுதியை அதிகளவில் தாக்கியதால் கிழக்கே 130 கிலோ மீட்டருக்கு வீடுகளும், கட்டடங்களும் தரைமட்டமாகின. தற்போது இரு உடல்களை தன்னார்வலர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சூறாவளியில் வீடு சேதமடைந்ததைக் கண்டு கண்ணீர் விடும் பெண்.

இதையும் படிங்க... கொரோனா பீதி - அமெரிக்க ரிசரவ் வங்கி வட்டிக் குறைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.