அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள "யாதும் ஊரே" திட்டத்தை அமெரிக்க வாழ் தமிழர்கள், தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், வறுமை நிலை துளியும் இல்லாத இந்தியாவின் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்று கூறினார்.
மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 3 லட்சம் கோடி முதலீடு உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது என்றும், அதில் தற்போது வரை 220 நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளைத் தொடங்கியுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.