சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. போரிn உக்கிரத்தை தாங்க முடியாமல் லட்சக்கணக்கான சிரியர்கள் துருக்கி, லெபனன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் துருக்கி-சிரியா இடையே நிலவிவரும் பயங்கர மோதலில் துருக்கி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 29 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளுடனான துருக்கி எல்லைப் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கிவரும் சுமார் 36 லட்சம் சிரிய அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற ஏதுவாக எல்லை திறந்துவிடப் போவதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்திருந்தார்.
நேற்று எல்லைகள் திறந்துவிடப்பட்டதாகவும், அங்கிருந்து 18 ஆயிரத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் வெளியேறி ஐரோப்பிய எல்லையை அடைந்துவிட்டதாகவும் எர்டோகன் தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எல்லைகளை திறுந்துவிடுவோம் என பல மாதங்களுக்கு முன்பே கூறிருந்திருந்தோம். அவர்கள் எங்களை நம்பவில்லை. நாங்கள் கூறியது போன்று நேற்று எல்லைp பகுதியில் கதவுகள் திறக்கப்பட்டன.
18 ஆயிரத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் ஐரோப்பிய எல்லையை அடைந்துவிட்டனர். தற்போதைக்கு கதவுகளை மூடமாட்டோம். இனிமேலும் அவர்களை எங்கள் நாட்டில் தங்கவைக்கப் போவதில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க : சிரியா, துருக்கி மோதல்: பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் ?