கரோனா வைரஸ் உலகையே உலுக்கிவரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பின் தாக்கம் வளரும் தலைமுறை மனதில் நீங்காத தடமாக மாறிவிடும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் குறித்து பில்கேட்ஸ் பேசுகையில், 'தற்போது மக்கள் சந்தித்து வரும் துயரை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இந்த வைரஸ் தாக்கம் எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போதைய சூழலில் எளிய சமூகங்கள், சிறுபான்மை சமூகங்கள் பெரும் வலிகளை சந்தித்து வருகிறது. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் நடவடிக்கையில் அரசுகள் செயல்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இது உலகப்போருக்கு நிகரான சூழல் எனவும், ஆனால் இந்தப்போரில் ஒட்டுமொத்த மனித குலமும் ஒரே அணியாக நின்று செயல்படவேண்டும் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பின்தங்கிய நாடுகளில், சுகாதாரப் பணிகளுக்கான சிறப்பான தொண்டுகளை பில்கேட்ஸின் 'கேட்ஸ் பவுன்டேஷன்' அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இது போன்ற பெருந்தொற்று உலகைத் தாக்க வாய்ப்புள்ளது என பில்கேட்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிபர் உடல்நிலை குறித்து வாய் திறக்க மறுக்கும் வடகொரிய ஊடகங்கள்